பாசனத்துக்காக வீடூர் அணை திறப்பு: ஜெயலலிதா உத்தரவு


Suresh| Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2016 (13:56 IST)
பாசனத்துக்காக வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 

 
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
 
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, விழுப்புரம் மாவட்டம், வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
 
இதனால், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையின்கீழ் உள்ள 3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :