காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்தக் கூடாது; வேல்முருகன் அதிரடி
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் சமீபத்தில் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். தமிழர்களின் உரிமையைப் பறிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு நாம் வரி செலுத்தக் கூடாது எனறார் வேல்முருகன்.
இந்நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என வேல்முருகன் தற்பொழுது கூறியுள்ளார். வேல்முருகனின் இந்த கருத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.