வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 17 மார்ச் 2020 (14:45 IST)

தமிழக சட்டசபைக்கு வருவோருக்கு... தீவிர சோதனை ...

தமிழக சட்டபசபைக்கு வருவோருக்கு... தீவிர சோதனை ...

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள்,பார், டாஸ்மாக், வணிக வளாகங்கள், மத வழிபாடு கூடுகை இடங்கள், நிச்சல் பயிற்சி,உடற்பயிற்சி நிலையம் , ஆகிய இடங்களில் மக்கள் கூட வேண்டாம் . பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் எனவும்  நேற்று தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டார்.
 
இந்தநிலையில், தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபைக்கு வரும் அனைவரும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
 
சட்டசபை கூட்டம் நடைபெற்று வருவதால், சென்னையில் உள்ள கோட்டைக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருனி நாசினி தெளிக்கப்பட்டது. உள்ளே எம்.எல்.ஏக்க வரும்போது இடங்களில் கிருமி நாசினி வைக்கப்பட்டு கைகளை சுத்தம் செய்து கொண்டனர்.
அத்துடன், அங்குள்ள  2 வாளிகளில் ஒரு வாளியில் தண்ணீரும் மற்றொரு வாளியில் சோப்புத் தண்ணீரும் வைத்திருந்தனர். 
 
மேலும், சட்டசபை வருவோருக்கு காய்ச்சல் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.சட்டசபைக்கு வெளியே நான்கு புறகும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முன்னெச்சரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.