1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (13:24 IST)

சர்வதேச ட்ராபிக் சிக்னல் தினம்.! சென்னையில் ஹார்ட்டின் வடிவில் ஒளிரும் சிக்னல் விளக்குகள்.!!

Heart Signal
இன்று சர்வதேச டிராபிக் சிக்னல் தினத்தையொட்டி சென்னையில் ஹார்ட்டின் வடிவில் ஒளிரும் சிக்னல் விளக்குகள் வாகன ஓட்டிகளை பெரிதும் கவர்ந்துள்ளன.
 
"நில் கவனி செல்” பயணம் தொடர்பான இந்த வார்த்தைகளை எத்தனை பேர் அலட்சியப் படுத்துகிறார்கள் தெரியுமா? அவர்களுக்கும் தெரியும் இந்த அலட்சியத்தின் மூலம் தங்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது. ஆயினும் இந்தத் தவறை இன்னும் பலர் செய்தே வருகின்றனர். அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை பற்றிய விழிப்புணர்வைத் தரவே சர்வதேச போக்குவரத்து விளக்குகள் தினம் கடைப் பிடிக்கப் படுகிறது .
 
பயணங்களும் வேகத்தை விட சிறந்தது விவேகம் எனும் சொற்றொடர் உண்டு. ஆம் விவேகத்துடன் சாலைப் பயணத்தின்போது பாதுகாப்பு தரும் போக்குவரத்து விளக்குகளுக்கு கட்டுப்பட்டு நடந்தாலே பல விபத்துகள் தடுக்கப்படும். மனிதன் ஆதிகாலத்தில் இருந்தே பயணம் நிமித்தம் பலவிதமான கட்டுப்பாடுகளை காலத்திற்கு ஏற்ப கடைப்பிடித்து வந்தாலும் அறிவியல் முன்னேற்றங்கள் பெருகிய இந்தக் காலத்தில் முதன் முதலில் இந்த போக்குவரத்துக்கான எச்சரிக்கை ஒளி விளக்குகளை பொருத்தியவர் ஜேம்ஸ் ஹோக் என்பவரே. 
 
1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நகரான ஓஹியோ கிளீவ்லாண்ட்ல் உள்ள  யூக்ளிட் அவென்யூவில் மூலையில் ஜேம்சால் பொருத்தப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் முதல் போக்குவரத்து விளக்கு என்று கருதப்படுகிறது. அதில் நான்கு சிவப்பு விளக்குகள் மற்றும் பச்சை விளக்குகளுடன் ஒளி எப்போது மாறப்போகிறது என்பதற்கான கால அளவு கொண்ட ஒலி எழுப்பும் கருவியுடன் வடிமைத்து பொருத்தினார். 
 
இது அருகில் உள்ள இடத்தில இருந்த மனிதரின் கைகளால் இயக்கும் வண்ணம் அப்போது இருந்தது. காலங்கள் மாற மாற ஆட்டோமேடிக்காக இயங்கும் விளக்குகள் தற்போது சிக்னல் எனும் பெயரில் சாலைக் கம்பங்களில் பொருத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் முதன் முதலில் ஜேம்சால் பொருத்தப் பட்ட இந்த தினத்தையே சர்வதேச போக்குவரத்து விளக்குகள் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 
அதன்படி இன்று சர்வதேச டிராபிக் சிக்னல் தினத்தையொட்டி சென்னையில் உள்ள சில டிராஃபிக் சிக்னல் விளக்குகள் இதய வடிவில் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதய பிரச்னை தொடர்பாக அவசர காலங்களில் முதலுதவி அல்லது மருத்துவ உதவியை விரைவாக பெறுவதற்காக போக்குவரத்து சிக்னலில் இதய வடிவிலான அமைப்பை ஒளிர செய்துள்ளனர்.