வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஜூன் 2024 (12:17 IST)

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

Suresh Gopi
கேரளாவில் பாஜக சார்பில் நின்று வென்று அமைச்சரான நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை புகழ்ந்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றிருந்தாலும் கேரளாவில் முதல்முறையாக ஒரு சீட்டை வென்று காலடி வைத்துள்ளது பெரிதாக பேசப்பட்டது. அதற்கு காரணம் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. சுரேஷ் கோபி அமோக வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை இந்தியாவின் அன்னை என குறிப்பிட்டிருந்தார். தான் சார்ந்த பாஜக கட்சியினர் தொடர்ந்து நேரு, இந்திரா காந்தி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் சுரேஷ் கோபி இவ்வாறு பேசியது பாஜக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுரேஷ் கோபி “இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என நான் கூறியது எனது இதயத்தில் உள்ள கருத்து. என் மனதில் உள்ளதை சொன்னதில் எந்த தவறும் இல்லை. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னைதான். இந்தியாவை கட்டி எழுப்பியவர் அவர். எதிர்கட்சி என்பதால் அவரை மறுக்கவோ மறக்கவோ முடியாது” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K