1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (13:15 IST)

ராணுவ விமானத்தில் பத்திரமாக வந்து சேர்ந்த இந்தியர்கள்! – குஜராத்தில் இறங்கிய விமானம்!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆக்கிரமித்த நிலையில் இரண்டாவது தவணையாக 120 இந்தியர்கள் பத்திரமாக மீட்டு வரப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்குள்ள பிற நாட்டவர்களை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்துக் கொள்ள சிறப்பு விமானங்களை அனுப்பி வருகின்றன. முன்னதாக 129 இந்தியர்கள் மீட்டு வரப்பட்ட நிலையில் இன்று அதிகாலை இந்திய ராணுவ விமானம் காபூல் சென்றது.

அங்கு 120 இந்த்யர்களை பத்திரமாக ஏற்றிக் கொண்டு தற்போது குஜராத் ஜாம் நகர் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது விமானம். மேலும் ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் இருந்தால் அவர்களை மீட்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.