1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2019 (20:39 IST)

டாப் 10 அசுத்தமான ரயில் நிலையங்களில் தமிழகம் முதலிடம் : அதிர்ச்சி பட்டியல்!

இந்தியாவில் உள்ள சுத்தமான மற்றும் அசுத்தமான டாப் 10 ரயில் நிலையங்கள் குறித்த பட்டியலை ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் டாப் 10 சுத்தமான ரயில் நிலையங்களில் ஒன்று கூட தமிழ்நாட்டில் இல்லை. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் ரயில் நிலையம் முதலிடத்தை பெற்றுள்ளது. முதல் பத்து இடங்களில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், காந்தி நகர் உள்ளிட்ட 7 ரயில் நிலையங்கள் இடம் பிடித்துள்ளன. ஆனால் அதில் ஒரு தமிழக ரயில் நிலையம் கூட இல்லை.

அதேசமயம் டாப் 10 அசுத்தமான ரயில் நிலையங்களின் பட்டியலில் முதலிடத்திலேயே தமிழகம் உள்ளது. சென்னையை அடுத்துள்ள பெருங்களத்தூர் ரயில் நிலையம்தான் இந்தியாவின் அசுத்தமான ரயில் நிலையங்களில் முதல் இடத்தை பெற்றுள்ளதாம். தொடர்ந்து கிண்டி, வேளச்சேரி, கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்கள் என தமிழகத்தை சேர்ந்த 6 இடங்கள் தூய்மையற்ற பட்டியலில் உள்ளன.