திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (09:37 IST)

12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

wind
கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இந்த ஆண்டு காற்றாலை மின்சாரம் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் இந்த ஆண்டு 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
நேற்று ஒரே நாளில் காற்றாலைகள் மூலம் 119 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி உற்பத்தியாகி இருப்பதாகவும் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது 
 
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிப்பதன் காரணமாக மின்வெட்டு ஏற்ப வாய்ப்பில்லை என்றும் காற்றாலை மூலம் வரும் அக்டோபர் வரை அதிக மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன