வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (16:24 IST)

ஊராட்சி மன்ற தலைவர்களின் ஊதியம் உயர்வு- அமைச்சர் அறிவிப்பு

ஊராட்சி மன்ற தலைவர்களின் மாதம் ஊதியம் ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊராட்சி  மன்றத் தலைவர்களின் மாத ஊதியம் ரூ. 1000 இருந்து வந்த நிலையில், இத்தொகையை உயர்த்தி சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் பெரியகருப்பன் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில்,  ஊராட்சி மன்ற தலைவர்களின் மாதம் ஊதியம் ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய உயர்வின் முலம் சுமார் 12000 க்கும் அதிகமான ஊராட்சித் தலைவர்கள் பயன் பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.