புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (17:04 IST)

கொரொனா பரவல் அதிகரிப்பு…ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தல்

corono
தமிழ்நாட்டில் கொரொனாவைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள்  நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணான் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா பல நாடுகளில் கொரொனா தொற்று பரவியது. இதன் 3 வது தொற்று இந்தாண்டு பரவிய  நிலையில் ஓரளவு தொற்றுக் குறைந்தது. விரைவில் 4 வது தொற்று ஏற்பட வாயப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், தமிழ் நாட்டில் கொரொனாவைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள்  நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணான் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், லேசான அறிகுறிகள் இருந்தாலும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து சொன்னதை மக்கள் தவிர்க்க வேண்டும், மக்கள் தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும். தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட வேண்டும் என தெரிவித்துள்ளது.