Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கன்னித்தீவு கதையாகுமா வருமானவரி சோதனை? மு.க.ஸ்டாலின்


sivalingam| Last Modified வியாழன், 9 நவம்பர் 2017 (14:30 IST)
சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறையினர் காலை முதல் சல்லடை போட்டு சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 
 
இந்த நிலையில் இந்த ரெய்டு குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், 'ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், சேகர் ரெட்டி மற்றும் முதலமைச்சர் பழனிச்சாமியின் உறவினர் ராமலிங்கம், தியாகராஜர் ஆகியோர்களின் வீடுகளில் நடந்த வருமான வரிச்சோதனையின் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதேபோல் தான் இந்த சோதனையும் இருக்குமா? என்ற எண்ணம் ஏற்படுகிறது.
 
இந்த சோதனை தினந்தந்தியின் வரும் கன்னித்தீவு போல் முடிவில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது. இதுகுறித்து வருமான வரித்துறை அமைச்சர் அல்லது அதிகாரிகள் விளக்கம் கொடுத்த பின்னர் இந்த சோதனை குறித்து நான் கருத்து தெரிவிக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :