1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (10:31 IST)

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரி சோதனை!

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

 
சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு, கணக்கில் வராத முதலீடு ஆகியவை அடிப்படையில் சென்னை புரசைவாக்கம், தியாகராயர் நகர் பகுதிகளில் உள்ள பிரபல வணிக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 
 
புரசைவாக்கம், தியாகராயர் நகர் மட்டுமின்றி போரூர், குரோம்பேட்டை பகுதிகளிலும் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.