புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 13 ஜூலை 2016 (09:28 IST)

திமுக முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

திமுகவில் முக்கியமான தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை இன்று அதிரடி சோதனை சோதனை நடத்தினர்.


 
 
திமுக தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவரான ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பு செய்ததாத வருமான வரித்துறைக்கு வந்த பல்வேறு புகார்களை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
 
ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை, மருத்துவக் கல்லூரி, விடுதிகள், தி.நகர் அலுவலகம், அடையாறு, நுங்கம்பாக்கம், மகாபலிபுரம் வீடுகள் உட்பட 40 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது.