புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (15:26 IST)

பஞ்சாமிர்த கடைகளில் ரெய்டு – வருமான வரித்துறை அதிரடி !

பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யும் கடைகளில் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.

பழனி முருகன் கோயிலுக்கு வருகைத்தரும் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் உலகப் புகழ்பெற்றது.  சமீபத்தில் பழனி பஞ்சாமிர்தத்துக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது அதன் பெருமைகளுள் ஒன்று.

இந்த பஞ்சாமிர்த தயாரிப்புகளில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் கந்தவிலாஸ் மற்றும் சித்த நாதன்  ஆகிய இரு நிறுவனங்கள் புகழ்பெற்றவை. இவ்விரு நிறுவனங்களும் பஞ்சாமிர்தம் உற்பத்தி மற்றும் விற்பனைகளில் கோலோச்சி வருகின்றன. இந்நிலையில் இன்று காலை அதிரடியாக இவ்விரு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.