திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2020 (17:49 IST)

எந்தெந்த மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும்: வானிலை ஆய்வு மையம்!

எந்தெந்த மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும்: வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள நிவர் புயல் தற்போது தமிழகம் மற்றும் புதுவையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த புயல் மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கலாம் என்றும் இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெரும் சேதங்கள் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது
 
இதற்காக பேரிடர் மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதும் தமிழக மின்சாரத்துறை புயலால் ஏற்படும் சேதத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் தமிழக அரசு நாளை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. புயல் கரையை கடந்து முடிக்கும் வரையிலும், கரையை கடந்த பின்னரும் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் நிவர் புயலால் ஏற்படும் சூறாவளி காற்றினால் எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தகவல் தெரிவித்துள்ளது. நிவர் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் நிவர் புயல் கரையை கடக்கும்போது எந்த காரணத்தை முன்னிட்டும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.