வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (13:25 IST)

அதிமுகவில் பெரும் சர்ச்சை: மதுவிற்கு எதிரான பேரணியை தொடங்கி வைத்த அமைச்சர் நத்தம்

மதுவிலக்கு சாத்தியமில்லை எனக்கூறி மதுவிற்கு எதிரான பேரணியை தொடங்கி வைத்தார் நத்தம் விஸ்வநாதன்

தமிழகத்தில் மதுவிலக்கு தற்போது சாத்தியமில்லை என்று சட்டப்பேரவையில் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ள நிலையில், மதுபானத்திற்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை இன்று அவர் தொடங்கி வைத்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சில நாட்களுக்கு முன்பு நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மதுவிலக்கு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் நந்தம் விஸ்வநாதன், மற்ற மாநிலங்களில் மதுவிலக்கு வராமல் தமிழகத்தில் மட்டும் சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்தார். அமைச்சரின் இவருடைய பதில், தமிழகத்தில் மதுவிலக்குக்கு எதிராக போராடியவர்களிடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், திண்டுக்கலில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் மதுவிற்கு எதிரான விழிப்புணர்வுப் பரப்புரையை இன்று அவர் தொடங்கி வைத்தார். அந்த பேரணியில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
 
தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என சில நாட்களுக்கு முன்பு அறிவித்த அவர், இன்று மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கி வைத்திருப்பது அதிமுக கட்சி வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.