1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 31 அக்டோபர் 2020 (21:04 IST)

மருத்துவர்களை கலங்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்? –கமல்ஹாசன் கேள்வி

நான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும்  அரசு மருத்துவர்கள் கடந்த வருடம் போராடினர். ஆனால் ஒரு வருடம் ஆகியும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் உள்ள நிலையில் நடிகரி கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், மருத்துவர்களுக்கு 4 வது ஊதியப்பட்டை அளிக்காமல் கலங்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துப் போராடினர் நம் அரசு மருத்துவர்கள். அனைத்துத் தரப்பும் நியாயம் என்று ஒப்புக் கொண்ட போன வருடப் போராட்டம் அது.

செயலாளர் பேச்சுவார்த்தை, அமைச்சர் வாக்குறுதி என்று நீண்ட நாடகம், 'தாயுள்ளத்தோடு முதல்வர் அளித்த உறுதி' என்னும் க்ளைமாக்ஸோடு முடிந்தது. இடையில் வந்த பெருந்தொற்றில் போராட்டத்தை மறந்து, உயிரையும் பணயம் வைத்து மக்களையும், அரசின் மானத்தையும் காத்தனர் அரசு மருத்துவர்கள்.

ஒரு வருடம் ஆகியும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கலங்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.