வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (17:09 IST)

பிரதமர் வருகையையொட்டி திருப்பூரில் டிரோன்கள் பறக்கத் தடை!

Pm Modi
பிரதமர் நரேந்திரமோடி  நாளை பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில்  பாஜக பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். இதையொட்டி, திருப்பூரில் டிரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக பாஜக அண்ணாமலையில் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை நிறைவு விழாவை, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளனர்.
 
அதன்படி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூர் பகுதியில்1300 ஏக்கர் நிலம் இடம் தேர்வு செய்யப்பட்டு, பொதுக்கூட்ட மேடை, தொண்டர்கள் அமரும் இடம், வாகனங்கள்  நிறுத்தும் இடம்  போன்றவற்றை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
 
இந்த நிலையில், பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதால், அந்த மைதானத்தை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளனர்.
 
அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ''நாளை மற்றும்  நாளை மறு நாள், திருப்பூர் மாவட்ட எல்லையில் ட்ரோன்கள்  பறக்கத் தடைவிதித்து.. உத்தரவிட்டுள்ளார்.