வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (08:32 IST)

12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் அந்தமான் தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பதும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது
 
அந்த வகையில் அடுத்த 12 மணி நேரத்தில் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையோரம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது