Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சின்னம்மா, பெரியம்மா, குட்டிம்மா என்பதுதான் சட்டசபையில் நடக்கிறது - கடுப்பாகும் ஸ்டாலின்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 1 பிப்ரவரி 2017 (15:58 IST)
கேள்வி நேரத்தின்போது ஜெயலலிதாவை புகழ்வது, சசிகலாவை புகழ்ந்து பேசுவது, சின்னம்மா, பெரியம்மா, குட்டிம்மா, என்றெல்லாம் பேசுவது ஆகியவைதான் சட்டசபையில் நடந்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ”நாங்கள் எங்களுடைய சட்டமன்ற ஜனநாயக கடமை மற்றும் மக்களுக்கு தொண்டாற்றக்கூடிய மரபில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம்.

கேள்வி நேரத்தின்போது ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவது, சசிகலாவை புகழ்ந்து பேசுவது, சின்னம்மா, பெரியம்மா, குட்டிம்மா, என்றெல்லாம் பேசுவது ஆகியவைதான் சட்டசபையில் நடந்து கொண்டிருக்கிறது.

எங்களுடைய கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் நான் கண்டிப்போடு கூறி இருக்கிறேன், ’கேள்வி நேரத்தில் மட்டுமல்ல, எந்த நேரத்திலும் யாரையும் புகழ்ந்து பேசக்கூடாது, பிரச்சினைகளை மட்டும் தான் பேச வேண்டும்’ என்று சொல்லி இருக்கின்றேன். பலமுறை இதை நாங்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.

ஆனால், இந்த சபை அப்படி நடைபெறவில்லை. இருந்தாலும், எங்களைப் பொறுத்தவரையில், எங்கள் ஜனநாயக கடமைகளை ஆற்ற நாங்கள் மீண்டும் சபைக்கு செல்கிறோம்” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :