1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஜூலை 2024 (20:30 IST)

இவரது ஆட்சியில் சைக்கிளுக்கு பதிலாக ஸ்கூட்டர் வழங்கப்படும்.! அடித்து சொல்லும் பொன்முடி..!!

ponmudi
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வரும் ஆட்சியில் கட்டாயமாக மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,   எல்லாரும் நடந்து போய் படித்த காலம் போய் இப்போது சைக்கிள் சென்று படிக்கிற காலம் வந்துவிட்டது என்றார். இன்னும் கொஞ்சம் நாள் கழித்தால் என்ன ஆகும்? சைக்கிள் வேணாம் எங்களுக்கு பைக் வேண்டும் என்று கேட்பீர்கள் என்றும் அது தான் காலத்தின் வளர்ச்சி என்றும் அவர் கூறினார். 

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வரும் ஆட்சியில் கட்டாயமாக மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் காலம் வரும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். ஏனென்றால் இளைஞர்களை பற்றி நல்லா தெரிந்துகொண்டு அதற்கேற்ற திட்டங்களை செயல்படுத்தி கொடுப்பவர் உதயநிதி ஸ்டாலின் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.


உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என கடந்த சில நாட்களாக தகவல் பரவி வரும் நிலையில், அமைச்சர் பொன்முடியும் இந்த பேச்சு, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.