ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 24 மே 2018 (19:58 IST)

இணைய சேவை முடக்கம்: தத்தளிக்கும் கப்பல்கள்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால் நேற்று முதல் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. 
 
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், போராட்டம் குறித்த எந்த ஒரு தவறான செய்தியும் வெளியாககூடாது என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கபப்ட்டது. ஆனால், மாணவ, மாணவிகள் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவு செய்யமுடியாமல் திணறி வருகின்றனர் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியது.
 
இந்நிலையில், தற்போது இணையதள சேவை முடக்கப்பட்டதால் கப்பல்கள் துறைமுகம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5 சரக்கு கப்பல்கள் துறைமுகம் வரமுடியாமல் திணறியுள்ளன.
 
இதனால் தூத்துக்குடி துரைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை எப்பொழுது வழங்கப்படும் என தெரியாத நிலையில், சென்னை, கொச்சி வழியாக போக்குவரத்தை மேற்கொள்ள முயற்சி செய்யப்பட்டு வருகிறதாம்.