வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (13:08 IST)

கலைஞரே கடைசி அரசியல் தலைவர் : இளையராஜா புகழாரம்

இலக்கியத்திலும், அரசியலிலும் கலைஞர் கருணாநிதியே கடைசியானவர் என இசைஞானி இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மரணமடைந்தார். அவரின் உடல் நேற்று மாலை சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுகவினர் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.
 
மேலும், அவரது இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாத பலரும் தங்கள் உணர்வுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். தேமுதிக விஜயகாந்த் ஒரு கண்ணீர் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
 
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக சென்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ் பெருங்குடி மக்களே! கலைஞரின் மரண செய்தி நமக்கெல்லாம் துக்க தினமாக மாறிவிட்டது. இந்த துக்கத்திலிருந்து எப்படி வெளியே வரப்போகிறோம் என தெரியவில்லை. அரசியல் தலைவர்களிலேயே கலைஞரே கடைசி தலைவர். தமிழ் திரைப்படங்கள் மூலம் சுத்தமான தமிழ் வசனங்களை அவர் அள்ளி அள்ளி வழங்கியுள்ளார். அரசியல், கலை, இலக்கியம், தமிழ் என அனைத்து துறைகளிலும் அவர் சிறந்து விளங்கினார். அவரின் இழப்பு நமக்கு ஈடுசெய்யமுடியாத ஒன்றாகும்” என தெரிவித்துள்ளார்.