1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2023 (10:35 IST)

ஓபிஎஸ் இல்லைன்னா அதிமுக அம்பேல்தான்.. எங்க கூட்டணியே வேற! – டிடிவி தினகரன்!

புதுக்கோட்டை மாவட்டம் இச்சடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கலந்து கொண்டு கொடியேற்றினார்


 
 இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்

இரட்டை இலை இருந்தும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தற்போது எவ்வளவு பலவீனம் அடைந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது

இதனை மறைப்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பலரை அதிமுகவில் இணைத்து வருகின்றனர்

அதிமுக தற்போது வட்டார கட்சியாக பலவீனம் அடைந்து வருகிறது. இதனால்தான் ஓபிஎஸ் கூட்டணி இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார்

டிசம்பர் அல்லது ஜனவரியில் தான் அமமுக யாரிடம் கூட்டணி என்பது தெரியவரும். முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் இதனை கால தாமதப்படுத்தும் விதமாக ஆளுநர் அதற்கான ஒப்புதலை கிடப்பில் போட்டிருந்தது தவறு

இதுபோன்று ஆளுநர் காலதாமதம் படுத்தினால் நாடு முழுவதும் ஊழல் வழக்குகள் பெருகும் நிலை ஏற்படும். திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக மக்களை ஏமாற்றம் ஆட்சியாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது நிர்வாக திறமை இன்மைதான் இந்த ஆட்சியில் உள்ளது. பழனிசாமி செய்த தவறால் திமுக தெரிந்திருக்கும் என்று நினைத்து திமுக ஆட்சியை தற்போது திமுக ஆட்சி மீது பொதுமக்களுக்கு மிகப்பெரிய வேருப்பு ஏற்பட்டுள்ளது

வரும் காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வந்தால் மாற்று சக்தியாக இருக்கும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள்

அறநிலையத்துறையில் நடைபெறும் ஊழல்களை சரி செய்ய வேண்டும் என்று கூறுவது தான் சரி அதற்காக அறநிலையத்துறையை இருக்கக் கூடாது என்று கூறுவது சரியான முடிவு அல்ல. பலரை பாதுகாக்கும் விதமாக ஆளுநர் செயல்படுவதும் தவறு

எடப்பாடி பழனிச்சாமி உடன் பயணிப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு விருப்பமில்லை. கொடநாடு கொலை வழக்கில்  காவல்துறையினர் விரைந்து விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளை தண்டனை பெற்றுத் தர வேண்டும் கண்டுபிடித்து

தமிழ்நாட்டுக்கு விடிவு வரும் என்றுதான் திமுக வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்தது ஆனால் தற்போது தமிழகத்தை அதல பாதாளத்திற்கு கீழே தள்ளிவிட்டு தான் ஆட்சியை விட்டு திமுக போகும் நிலை ஏற்பட்டுள்ளது

எடப்பாடி பழனிச்சாமி முதலில் வன்னியர்களை ஏமாற்றினார் அதன் பின்னர் ஒவ்வொரு வரவாக ஏமாற்றி வருகிறார் அதேபோல தான் தற்போது சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டால் போல் நடித்து அவர்களை ஏமாற்றி வருகிறார் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு இனி ஒருபோதும் வராது