Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா முதல்வரானால் தமிழகத்தில் கலவரம் வெடிக்கும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு!

சசிகலா முதல்வரானால் தமிழகத்தில் கலவரம் வெடிக்கும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு!


Caston| Last Updated: செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:09 IST)
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தமிழக முதல்வராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு வழி விட்டு பன்னீர்செல்வமும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து சசிகலா முதல்வராக பதவியேற்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.

 
 
இந்த சூழலில் தமிழகம் முழுவதும் சசிகலாவுக்கு எதிரான மனநிலையிலேயே பொதுமக்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் சசிகலாவுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் சசிகலா மீதான் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில் வரும் என உச்ச நீதிமன்றம் கூற அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
 
தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்தால் சசிகலா சிறைக்கு செல்ல நேரிடும் மீண்டும் தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்படும். இதனால் பலரும் சசிகலாவின் முதல்வர் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது அவருக்கான எதிர்ப்பு அதிகரித்தது.
 
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த செந்தில் குமார் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டுமென பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 
அந்த மனுவில், சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்றால் தமிழகம் முழுவதும் கலவரம் வெடிப்பதற்கான சூழல் நிலவுகிறது. ஏற்கனவே பண மதிப்பிழப்பு, வர்தா புயல், ஜெயலலிதா மரணம் போன்றவற்றால் தமிழகத்தில் குழப்பமான சூழல் உள்ளது.
 
இந்நிலையில் புதிதாக பிரச்சனை ஏற்படக்கூடாது, மேலும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது அதில் தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தால், வரக்கூடிய சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :