வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (09:24 IST)

பெரியார், அம்பேத்கரை இழிவுபடுத்தினால் சும்மா விட மாட்டோம்! – அண்ணாமலைக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ், அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.

அதில் அவர் “தமிழ்நாடு தந்தை பெரியார் மண். இந்த மண்ணில் அண்ணாமலை இப்படியெல்லாம் பேசுவது தவறு. தந்தை பெரியார் இல்லையென்றால் தமிழ்நாட்டில் சமூகநீதி இல்லை. அவர்தான் இந்தியாவுக்கு சமூக நீதியைத் தொடங்கி வைத்தவர். அதனால் அண்ணாமலையோ அவரை சார்ந்தவர்களோ, கட்சிகளோ இழிவாகப் பேசக் கூடாது. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகிய தலைவர்களை தவறாக பேசினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்” என்று பேசியுள்ளார்.

Edit by Prasanth.K