Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குமாரசாமி முதல்வரானால் என்ன நடக்கும்: தமிழிசை எச்சரிக்கை

Last Modified புதன், 16 மே 2018 (09:00 IST)
கர்நாடகாவில்
குமாரசாமி முதல்வரானால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்று தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் எச்சரித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது. எனவே அக்கட்சியின் குமாரசாமிக்கு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடக நிலவரம் குறித்து கருத்து கூறிய தமிழிசை செளந்திரராஜன், 'கர்நாடகாவில் குமாரசாமி முதல்வரானால் தமிழகத்துக்குதான் பிரச்னையாக அமையும் என்றும், குமாரசாமி கட்சியின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம் என கூறப்பட்டிருந்ததாகவும் தமிழிசை இன்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது ஜனநாயக முறைப்படி சரியல்ல என்றும் இதுவொரு சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் கூறிய தமிழிசை, பாஜக ஆட்சி அமைந்தால் மட்டுமே காவிரி பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று தெரிவித்தார்.இதில் மேலும் படிக்கவும் :