திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 டிசம்பர் 2017 (20:56 IST)

பாஜகவுடன் இணைந்தால் அதிமுக ஊழலே செய்யாது; தமிழிசை

பாஜகவுடன் சேர்ந்தால் அதிமுக ஊழலே செய்யாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

 
ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசியவர் கூறியதாவது:-
 
பாஜகவின் தயவில்தான் அதிமுக ஆட்சி நடத்துகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரியாமல் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை. பாஜகவுக்கு வரும் வாக்குகளை மாற்ற நினைத்து அவர் இவ்வாறு கூறி வருகிறார்.
 
பாஜகவுடன் இருந்தால் அதிமுக ஊழலே செய்யாது. ஏனெனில் ஊழல் இல்லாத ஒரே கட்சி பாஜக மட்டும்தான். பாஜக எங்கு சென்றாலும் அங்கு ஊழலற்ற தன்மை இருக்கும். இந்த ஊழலற்ற தன்மை தமிழகத்திற்கு வரவேண்டும் என்பதால்தான் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் என்று கூறியுள்ளார்.