வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 26 ஆகஸ்ட் 2017 (17:41 IST)

பதவி ஆசையிருந்தால் நானே முதல்வராகியிருப்பேன்; டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கும் போது அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி என்னை துணை முதல்வராக்க வேண்டும் என்றனர் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


 

 
திருப்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
 
கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோது எடப்படி பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். சசிகலா சிறை சென்ற பின் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர்தான் என்னை பொதுச்செயலாளராக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 
 
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கும் கடிதத்தை ஆளுநரிடம் கொடுக்கச் சென்றபோது தங்கமணியும், வேலுமணியும் என்னை துணை முதல்வராக்க வேண்டும் என்றனர். எனக்கு பதவி ஆசை இருந்தால் நான் முதல்வராகியிருப்பேன். ஆனால் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம் என்றார்.