உயிருக்கு ஆபத்து... கொலை மிரட்டல்: கதறும் சி.ஆர்.சரஸ்வதி?


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (16:35 IST)
முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும், உறவினர்களும் போனில் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.

 


முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக திரும்பியதை அடுத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்றுவரை அடங்காத பரபரப்பில் மேலும் மேலும் திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. ஆதிமுக எம்.எல்.ஏ.க்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் குற்றம் சாட்டினார்.

ஆனால் தற்போது சுமார் 9 எம்.எல்.ஏ.க்கள் நட்சத்திர விடுதியில் இருந்து வெளியே வந்து, நாங்கள் அடைத்து வைக்கப்படவில்லை சுதந்திரமாகதான் உள்ளோம் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். சுதந்திரமாக உள்ளவர்கள் ஏன் இப்படிப்பட்ட சுழலில் நட்சத்திர விடுதியில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, எனக்கு மொபைல் போன் மூலம் கொலை மிரட்டல் வந்தது என பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும், உறவினர்களும் என்னை போனில் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார்கள். அதற்கான சாட்சி போனில் உள்ளது. இதனால் தான் என் போன் ஸ்விட் ஆப் செய்யப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :