Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராம மோகனராவ் பரபரப்பு பேட்டி: ராணுவத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டேன்!

ராம மோகனராவ் பரபரப்பு பேட்டி: ராணுவத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டேன்!

செவ்வாய், 27 டிசம்பர் 2016 (11:38 IST)

Widgets Magazine

வருமான வரித்துறையினரின் சோதனையின் போது முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் 26 மணி நேரம் ராணுவத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.


 
 
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சில தினங்களுக்கு முன்னர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். பின்னர் தலைமைச் செயலகத்திலும் நுழைந்து தலைமைச் செயலாளர் அலுவலக்த்தில் சோதனையிட்டனர்.
 
இந்த சோதனையின் போது துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் ராம மோகனராவ் வீட்டில் பல ஆவணங்கள், பணம், நகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை வைத்து அவரை கைது செய்யும் சூழல் நிலவியது இந்நிலையில் அவர் உடல் நலம் சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தன்னுடைய வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் காட்டிய வாரண்டில் என்னுடைய பெயர் இல்லை என கூறினார். மேலும் துப்பாக்கி முனையில் ராணுவத்தினரை வைத்து வீட்டுக்காவலில் 26 மணி நேரம் வைத்தனர் என பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சேகர் ரெட்டியுடன் எந்த தொடர்பும் இல்லை - ராம் மோகன் ராவ் பேட்டி

தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் தனக்கு தொடர்பும் இல்லை என தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ...

news

செல்லாத ரூபாய் நோட்டு: ரூ.50,000 வரை அபராதம்; மத்திய அரசு அதிரடி!

டிசம்பர் 30ம் தேதிக்குப் பின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் ...

news

மருமகளுடன் சண்டைப்போட்டு மாமனார் தற்கொலை!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மருமகளுடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த மாமனார் தூக்கிட்டு ...

news

அப்பல்லோவில் ஜெயலலிதாவின் உணவில் ரகசியமாக கலக்கப்பட்டது என்ன?: கோர்ட்டுக்கு செல்லும் ஆதாரம்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ...

Widgets Magazine Widgets Magazine