வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 24 ஜூன் 2021 (08:34 IST)

கூட்டுறவு வங்கிக் கடன்கள் ரத்து செய்ததில் முறைகேடு… அமைச்சர் ஐ பெரியசாமி!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கடந்த ஜனவரி மாதம் கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்தது.

ஆனால் இன்னும் அதற்கான முழுமையான ரசீது வழங்கப்படவில்லை. அது போலவே அதற்கு முன்னதாக ரத்து செய்யப்பட்ட நகைக்கடன்களும் முடிக்கப்பட்டு நகைகள் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதுபற்றி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதற்கு அமைச்சர் ஐ பெரியசாமி பதிலளித்தார்.

அப்போது ‘ரத்து செய்யப்பட்ட கடன்களில் மோசடிகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. அது சம்மந்தமாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. சேலத்தில் ரூ.1,250 கோடியும், ஈரோட்டில் ரூ.1,085 கோடியும் கடன்கள் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளன. இது மற்ற பகுதிகளை விட 5 மடங்கு அதிகம். இது சம்மந்தமான ஆய்வுகள் முடிந்த பின்னர் ரசீதுகள் வழங்கப்படும்’ என அறிவித்துள்ளார்.