1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 ஜூன் 2021 (09:28 IST)

மாணவிகள் பாலியல் புகார்: ‘தெரியாது’ என பதிலளித்த PBSS பள்ளி நிர்வாகிகள்!

பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த கேள்விகள் அனைத்திற்கும் தெரியாது என்றே அப்பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் பதில் அளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன் பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை செய்து வருகிறது
 
நேற்று பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் தாளாளர் ராஜேந்திரன் ஆகிய இருவரிடமும் நடத்திய 3 மணி நேர விசாரணையில் பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே இருவரும் பதில் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது
 
சமூகவலைதளத்தில் புகார் வருவதற்கு முன்பு மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று இருவரும் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது