Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அது யார் சேகர் ரெட்டி? - ராம் மோகன் ராவ் அந்தர் பல்டி


Murugan| Last Updated: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (11:41 IST)
தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் தனக்கு தொடர்பும் இல்லை என தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.

 

 
தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையை தொடர்ந்து, அவரிடம் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவருக்கும், ராம் மோகன் ராவுக்கும் இடையே தொழில் ரீதியான  உறவு இருப்பதாக தெரிய வந்தது.
 
இதனைத் தொடர்ந்து ராம் மோகன் ராவ் வீடு, அவரின் மகன் வீடு மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
 
இந்நிலையில், இன்று அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
 
“சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. வருமான வரித்துறையினர் என் வீட்டிற்கு வந்த போது, அவர்கள் கொண்டு வந்த வாரண்டில் என் பெயர் இல்லை. அதில் என்னுடைய மகன் பெயர்தான் இருந்தது” என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :