வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 மே 2024 (08:45 IST)

ஒரு ஆர்வத்துல பண்ணிட்டேன்.. ‘தலை’வணங்கி மன்னிப்பு கேக்குறேன்! – கில்லி பேனரை கிழித்த அஜித் ரசிகர் வீடியோ!

Ghilli banners
நேற்று காசி தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த கில்லி பேனரை கிழித்த அஜித் ரசிகர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.



விஜய் நடித்து தரணி இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி படம் 20 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக ஏப்ரல் 20ல் ரீரிலீஸ் செய்யப்பட்டு பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் நேற்று மே 1ல் அஜித்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மங்காத்தா, பில்லா, தீனா போன்ற படங்கள் சில திரையரங்குகளில் வெளியாகின.

அந்த வகையில் சென்னை காசி தியேட்டரில் கில்லி, தீனா இரு படங்களும் நேற்று திரையிடப்பட்டது. அப்போது தீனா படத்திற்கு பேனர் வைத்து மாலை போட்டுக் கொண்டாடிய அஜித் ரசிகர்களில் ஒருவர் அங்கிருந்த விஜய்யின் கில்லி பட பேனரை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிழிந்த பேனரை அகற்றி புதிய கில்லி பேனரை வைத்த காசி திரையரங்கம், பேனரை கிழித்த அஜித் ரசிகர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்தது.

அதன் அடிப்படையில் பேனரை கிழித்த அஜித் ரசிகர் எபினேசர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அவர் வீடியோ வெளியிட்ட நிலையில் போலீஸாரால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K