நான் தலைமறைவில் இல்லை: இருக்கும் இடத்தை தெரிவித்த எஸ்.வி.சேகர்

Last Modified ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (18:31 IST)
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நடிகர் மற்றும் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக எஸ்.வி.சேகர் தலைமறைவாகிவிட்டதாக இன்று காலை ஒருசில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தான் தலைமறைவாகவில்லை என்று கூறியுள்ள எஸ்.வி.சேகர் தற்போது பெங்களூரில் இருப்பதாகவும் இன்னும் மூன்று நாட்களில் சென்னை வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

,சொந்தவேலை காரணமாக பெங்களூரு சென்றுள்ளதாக எஸ்.வி.சேகர் கூறியுள்ள நிலையில் அவர் சென்னை திரும்பியவுடன் கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :