நான் என்ன ஜோதிடரா?: தினகரன் குறித்த கேள்விக்கு கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்!

நான் என்ன ஜோதிடரா: தினகரன் குறித்த கேள்விக்கு கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்!


Caston| Last Updated: சனி, 15 ஜூலை 2017 (17:06 IST)
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தால் தடாலடியாக தான் பதில் அளிப்பார். சமீபத்தில் எம்ஜிஆர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் எம்ஜிஆரை மட்டம் தட்டும் விதமாக அவரை மற்ற மாநிலத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது என சர்ச்சைக்குறிய வகையில் பதில் அளித்தார்.

 
 
இதனையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்நிலையில் தற்போது தினகரன் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் கடுப்புடன் தடாலடியாக பதில் அளித்துள்ளார்.
 
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் 29-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ள உள்ளார். இதனையடுத்து விழாவிற்கு மேடை அமைப்பதற்கான கால் கோள் நடும் விழா இன்று நடந்தது.
 
இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டால், அவரது செல்வாக்கு வளருமா? அதிமுகவிற்கு சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக இருக்குமா? என நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர், நான் கணித்து சொல்வதற்கு ஜோதிடர் கிடையாது என்று கடுப்புடன் கூறினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :