1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2019 (08:05 IST)

'தர்மயுத்தம் 2' தொடங்கும் அதிமுக பிரபலம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா குரூப்பின் டார்ச்சர் தாங்க முடியாமல் ஜெயலலிதா சமாதி அருகே தர்மயுத்தம் தொடங்கி தனி அணியாகவும் பிரிந்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாலர் முகம்மத் ஜான் மற்றும் மேட்டூர் நகர செயலாளர் என்.சந்திரசேகரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில் தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு கிடைக்காத அதிமுகவின் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அதிமுக தலைமை மீது விமர்சனங்களை வைக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அவர் இன்று ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆனால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்தே தேர்வு செய்துள்ளதால் எத்தனை தர்மயுத்தம் நடந்தாலும் இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.