1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (16:35 IST)

உயிரிழந்த மனைவிக்கு வீட்டில் சிலை நிறுவிய கணவர்..வைரலாகும் புகைப்படம்

selam
பாம்பு கடித்து உயிரிந்த தன் மனைவியின் நினைவாக  தன் வீட்டில் அவருக்கு ஒரு சிலை நிறுவியுள்ளார் கணவன். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தங்களுக்குப் பிடித்தவர்கள், அல்லது மதியாதைக்குரியவர்க்கு ஏதாவது மரியாதை செல்வது, பரிசளிப்பது வழக்கம். ஆனால், உயிரிழந்த தம் மனைவியின் சிலையை  நிறுவி அவரது மரியாதை செலுத்தி வருகிறார் சேலத்தை சேர்ந்த ஒரு கணவர்.

சேலம் மாநகராட்சி 1 வது வார்டுக்கு உட்பட்ட ஊட்டுக்கிணறு கிழாக்காடு பகுதியைச் சேர்ந்த எர்சன் – நிலா தம்பதியர்க்கு 24 ஆண்டுகளுக்கு முன்ன்பர் திருமணம் ஆனது.

இந்த தம்பதியர்க்கு 3பெண் குழந்தைகள் உள்ளனர். இதில்,ஒரு பெண்ணிற்குத் திருமணம் ஆன நிலையில் 2 பேர் கல்லூரியில் படிக்கின்றனர்.

ஓராண்டிற்கு முன் பாம்பு கடித்து உயிரிழந்த  தன் மனைவி நிலாவுக்கு, ஓராண்டாக தன் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டின் வரவேற்பறையில்  அவரது  நிறுவியுள்ளார் கணவர்.

இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
Edited by Sinoj