1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 அக்டோபர் 2021 (18:33 IST)

சொத்துக்காக கொலை செய்த தம்பதிக்கு 4 தூக்கு தண்டனை!

சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்த கணவன் மனைவிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த 2019ஆம் ஆண்டு திண்டிவனத்தில் சொத்துக்காக தாய் தந்தை தம்பி ஆகிய 3 பேரையும் பெட்ரோல் குண்டு வீசிக் கொலை செய்துவிட்டு ஏசி வெடித்து இறந்ததாக நாடகமாடியதாக கோவர்தனன் மற்றும் அவரது மனைவி தீபா காயத்ரி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கு விசாரணை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்த தீர்ப்பில் சொத்துக்காக கொலை செய்து நாடகமாடிய கோவர்த்தன மற்றும் அவரது மனைவி தீபா காயத்ரி ஆகியோருக்கு தலா 4 தூக்கு தண்டனை மற்றும் 2 ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது, இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.