செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (11:34 IST)

காவிரி விவகாரம்.. உண்ணாவிரத போராட்ட அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை..!

காவிரி விவகாரம்.. உண்ணாவிரத போராட்ட அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை..!

காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

 தமிழக பாஜக சார்பில் காவிரி விவகாரம் தொடர்பாக கும்பகோணத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து இன்று  டெல்டா மாவட்டங்களில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் அண்ணாமலையின்  இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  

மேலும் திமுக காவிரி விவகாரத்தில் விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிக்கிறது என்று கூறியுள்ள அண்ணாமலை அரசியல் லாபங்களுக்காக நாடகமாடும் திமுக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறது என்றும் கூட்டணி கட்சி என்ற காரணத்தால் கர்நாடக காங்கிரஸ் அரசை திமுக அரசு கண்டிக்காமல் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காவிரி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது கண் துடைப்பு என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran