ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (23:07 IST)

பெரம்பலூரில் இளம்பெண் நரபலி. மனைவியுடன் மந்திரவாதி கைது

கம்ப்யூட்டர், இண்டர்நெட், விஞ்ஞானம் என்று அறிவியல் வளர்ந்துள்ள இந்த நாட்களிலும் நரபலி போன்ற மூட நம்பிக்கைகளில் சிலர் இருப்பது அனைவருக்கும் வேதனை தரும் விஷயமாக உள்ளது. இன்று மாலை  பெரம்பலூர் அருகே மந்திரவாதி ஒருவரது வீட்டில் இளம் பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 


பெருமபலூரில் கார்த்திகேயன் என்ற மந்திரவாதி வீட்டில் சந்தேகத்திற்கு உரிய செயல்பாடுகள் நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதன்பேரில் காவல் துறையினர் அந்த வீட்டிற்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தியதில், இளம் பெண் ஒருவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் செய்த விசாரணையில் அந்த சடலத்தை வைத்து மந்திரவாதி பூஜை செய்து வந்ததாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 9 மாதங்களுக்கு முன் சிறுமி ஒருவரை நரபலி கொடுத்ததாக கைது செய்யப்பட்ட மந்திரவாதி கார்த்திகேயன், தற்போது ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் ஒரு நரபலியை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இதனிடையே விசாரணைக்கு பின்னர் மந்திரவாதியும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். நரபலி கொடுக்கப்பட்ட பெண் யார்? எதற்காக நரபலி கொடுக்கப்பட்டார் என்பது குறித்து போலீசார் இருவரையும் விசாரணை செய்து வருகின்றனர்.