1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 25 மார்ச் 2017 (05:04 IST)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 82 பேரின் வேட்பு ஏற்பு. மின்னணு வாக்குப்பதிவிற்கு நோ சான்ஸ்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட 127 பேர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று வேட்புமனுக்கள் பரிசிலீக்கப்பட்டது. இவற்றில் 82 பேர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.




 


இருப்பினும் மனுக்களை வாபஸ் பெற 27ஆம் தேதி வரை காலக்கெடு இருப்பதால் இந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டியிடுவார்கள் என்பதை அன்றுதான் உறுதியாக கூற முடியும்

ஆனாலும் குறைந்த பட்சம் 70 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால் மின்னணு வாக்குப்பதிவிற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. எனவே வாக்குச்சீட்டு முறைதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடைபிடிக்கப்படும் என தெரிகிறது.

‌திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன்,அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் மதுசூதனன்,எம்.ஜி.ஆர்.அம்மா தீபா, தேமுக வேட்பாளர் மதிவானன், பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர்களின் மனுக்கள் ஏற்பட்டதாக மனுக்கள் மீதான பரிசீலனை பொதுப் பார்வையாளர் பிரவீன் பிரகாஷ் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.