1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 7 மே 2015 (11:44 IST)

பிளஸ் -2 விடைத்தாள் நகல் பெறுவது எப்படி?

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் விடைத்தாள் நகல்  மற்றும் மதிப்பெண் மறுகூட்டல் பெற அரசு வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
 
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, பயின்ற பள்ளிகள் மூலமாகவே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மே 8 ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை (ஞாயிற்றுக் கிழமை தவிர விண்ணப்பிக்கலாம்.
 
விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகல் கேட்க விரும்புவர்கள், அதே பாடத்துக்கு, மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின்பு, அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டும்.
 
விடைத்தாள் நகல் பெற, மொழிப் பாடங்களுக்கு தலா 550 ரூபாய் கட்டணமும், மற்ற பாடங்களுக்கு தலா 275 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. 
 
மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியலுக்கு தலா 305 ரூபாய் கட்டணும்,  மற்ற பாடங்களுக்கு தலா 205 ரூபாய் கட்டணமும் வசூல் செய்யப்படுகின்றது. இந்த கட்டணத்தை, விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே ரொக்கமாக செலுத்தலாம்.
 
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை, தேர்வர்கள் பத்திரமாக வைத்து இருக்க வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் மடியும்.
 
விடைத்தாள் நகலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் தேதி மற்றும் இணையதள முகவரியை தமிழக கல்வித்துறை பின்பு முறைப்படி அறிவிக்கும்.