வீட்டை காலி செய்து அட்வான்ஸ் பணத்தை கேட்டவர் கொலை: வீட்டு உரிமையாளர் கைது..!
வீட்டை காலி செய்து அட்வான்ஸ் பணத்தை கேட்டவரை வீட்டின் உரிமையாளர் கொலை செய்ததை அடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே 60 வயது முதியோர் ஒருவர் சமீபத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்தார். அவருடைய மகளுக்கு மகேந்திர சிட்டியில் வேலை கிடைத்ததால் இந்த வீட்டை அவர் வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடியிருந்த வீட்டில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதிகள் இல்லை என்பதால் அவர் 28 நாட்களில் வீட்டை காலி செய்வதாகவும் தான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் மற்றும் 60 வயது முதியோருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் வீட்டின் உரிமையாளர் மகன் முதியவர் சந்திரசேகரை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரின் மகன் நரேந்திரன் என்பவரை கைது செய்துள்ளனர்
Edited by Mahendran