1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:12 IST)

அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை அறிக்கை..!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று அதிகாலை நடை பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களை சந்திக்கும் போது தலைசுற்றல் ஏற்பட்டது. 
 
உடனடியாக கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. பரிசோதனையின் அடிப்படையில் அவர் தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு இருதய ரத்த நாள பரிசோதனை செய்ததில் குறிப்பிட்ட தக்க அடைப்பு எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது. 
 
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை போதுமானது என்று முடிவு எடுக்கப்பட்டு இன்று மதியம் இரண்டு பத்து மணி அளவில் மருத்துவமனையில் இருந்து அவர் இல்லம் திரும்பினார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran