பொங்கல் தினத்தில் சென்னை கிண்டியில் குதிரைப் பந்தயம்.. லட்சக்கணக்கில் பரிசுகள்..!
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தில் கிண்டியில் டெர்பி குதிரை பந்தயம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டும் குதிரை பந்தயம் நடைபெறும் என்றும் பொங்கல் தினத்தில் நடைபெறும் குதிரை பந்தயத்தில் ஒன்பது குதிரைகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
டெர்பி பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரையின் உரிமையாளர்களுக்கு உரிமையாளருக்கு 70 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்க தொகை கிடைக்கும். இரண்டாவது குதிரைக்கு 27 லட்சமும் மூன்றாவது குதிரைக்கு 11.5 லட்சம், நான்காவது குதிரைக்கு 6 லட்சம் வழங்கப்படும். இரண்டு நாட்கள் நடைபெறும் பந்தயத்தின் முழு விவரங்கள் இதோ:
1. டாஷ்மெஷ் ஸ்டெட் மில்லியன் ரூ.14½ லட்சம், 2. நனோலி ஸ்டெட் பில்லிஸ் கோப்பை ரூ.16½ லட்சம், 3. சென்னை ரேஸ் கிளப் கோப்பை ரூ.22 லட்சம். 4. பொங்கல் மில்லியன் கோப்பை ரூ.10½ லட்சம், 5. எம்.ஏ.எம்.ராமசாமி நினைவு கோப்பை ரூ.18 லட்சம். 6. உஷா ஸ்டெட் மில்லியன் கோப்பை ரூ.14½ லட்சம்.இரண்டு நாட்கள் நடைபெறும் பந்தயத்தில் 14 ரேஸ்கள் நடைபெறுகிறது.
எச் பி எஸ் எல் என்ற நிறுவனம் டெர்பி பந்தயத்திற்கு ஸ்பான்சர் செய்கிறது. இதன் உரிமையாளர் பிருத்வி ராஜி டெர்பி பந்தயத்தில் ஜெயிக்கும் உரிமையாளருக்கு கோப்பையை பரிசாக வழங்குவார்.
Edited by Siva