வெற்றி அடைந்த சசிகலா புஷ்பா: ஜெ. மரணம் - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
ஜெயலலிதா மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்ற சந்தேகமும், அதுகுறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி கொண்டு இருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே இறந்து விட்டார் என்றும், அவருகே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று வெளியான அறிக்கைகள் அனைத்தும் பொய் என்றும் செய்திகள் வதந்தியாக பரவி வருகிறது.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி சசிகலா புஷ்பா மனு தக்கல் செய்திருந்தார். இந்த புகார் மனுவை கடந்த மாதம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து கொடுத்தார்.
அதன்படி சசிகலா புஷ்பாவின் புகார் கடிதத்தை சிபிஐக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. மேலும் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.