17 ஆம் தேதி நியாயவிலைக்கடைகளுக்கு விடுமுறை- தமிழக அரசு
வரும் 17 ஆம் தேதி நியாயவிலைக்கடைகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.
வரும் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 20 மளிகைபொருட்கள் அடங்கிய தொகுப்பினை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் தேதி முதல் மக்கள் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வரும் 17 ஆம் தேதி ரேசன் கடைகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.
வரும் 17 ஆம் தேதி நியாயவிலைக்கடைகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.