வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (16:30 IST)

நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில், எதற்காக தெரியுமா?...

school student
கச்சபேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். 
 
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்ததால் அப்பகுதியில் உள்ள 11 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு நாளை (01.02.2024) நடைபெறுவதை முன்னிட்டு முன்னிட்டு இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இக்கோவிலை சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள 1. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி, 2. அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 3.அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பெரிய காஞ்சிபுரம், 4.அந்திரசன் பள்ளி, 5.பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி, 6. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, 7. ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 8. சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி, 9. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள், 10. ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 11. அரசு கா.மு.சுப்பராயமுதலியார் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மேற்படி பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்